உள்ளூர் செய்திகள்

அல்லிக்குட்டை ஏரி பகுதியில் புதர்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ள காட்சி. 

புதர்களுக்கு தீ வைத்ததால் புகை மண்டலமான தாதம்பட்டி அல்லிக்குட்டை ஏரி

Published On 2023-06-27 09:12 GMT   |   Update On 2023-06-27 09:12 GMT
  • சேலம் மாநகராட்சி 36-வது டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் தாதம்பட்டி அல்லிக்குட்டை ஏரி உள்ளது.
  • ஏரியில் மாநகராட்சி சார்பில் புனரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணிக்காக ஏரி பகுதியில் உள்ள புதர்களை அகற்றாமல் அப்படியே தீ வைத்து எரித்து வருகின்றனர்.

சேலம்:

சேலம் மாநகராட்சி 36-வது டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் தாதம்பட்டி அல்லிக்குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியில் மாநகராட்சி சார்பில் புனரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணிக்காக ஏரி பகுதியில் உள்ள புதர்களை அகற்றாமல் அப்படியே தீ வைத்து எரித்து வருகின்றனர்.

இதனால் இந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகையால், அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, தாதம்பட்டி அல்லிக்குட்டை ஏரியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். தற்போது மாநகராட்சி சார்பில் புனரமைப்பு பணி நடக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் முறையாக புதர்களை அகற்றாமல், அப்பேடியே தீ வைத்து வருகின்றனர். இதனால் இப்பகுதி புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. மேலும் இப்பகுதி பொதுமக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டு தூக்கமுடியாமல் தவித்து வருகின்றோம்.

எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Tags:    

Similar News