உள்ளூர் செய்திகள்

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற வாலிபர் சாவு

Published On 2023-07-27 12:56 IST   |   Update On 2023-07-27 12:56:00 IST
  • குப்புசாமி இவரது மகன் பிரகாஷ் 23, டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார்.
  • மேட்டூர்- ரெயில் நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த டாரஸ் லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது.

சேலம்:

சேலம் செவ்வாய்ப் பேட்டை நரசிம்மசெட்டி தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் பிரகாஷ் 23, டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார்.

இவரது சகோதரருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை கொடுப்பதற்காக நேற்று பிரகாஷ் மேட்டூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அழைப்பிதழ்

அங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழை கொடுத்த அவர் பின்னர் சேலத்திற்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் மேட்டூர்- ரெயில் நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த டாரஸ் லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

சாவு

இதனை பார்த்த அந்த பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற கருமலைக்கூடல் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்றி ரவு 10 மணியளவில் அவர் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News