உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி.

அரசு பள்ளி மாணவிகளுக்கான சமூக கல்வி வழிகாட்டுதல் பயிற்சி

Published On 2023-11-01 13:47 IST   |   Update On 2023-11-01 13:47:00 IST
  • கிராமங்களில் பள்ளிச் செல்லும் சிறுமிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையை காணமுடிகிறது.
  • பெற்றோர்களின் போதிய‌ கண்காணிப்பும் அறிவுரை பகிர்தலும் இல்லாததால் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதும், குழந்தை திருமணங்களும் தொடர்ந்து வருகிறது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வாழப்பாடி, ஏத்தாப்பூர், காரிப்பட்டி, கருமந்துறை மற்றும் கரியக்கோவில் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி கிராமங்களில் பள்ளிச் செல்லும் சிறுமிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையை காணமுடிகிறது. பெற்றோர்களின் போதிய கண்காணிப்பும் அறிவுரை பகிர்தலும் இல்லாததால் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதும், குழந்தை திருமணங்களும் தொடர்ந்து வருகிறது.

எனவே வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு பெண் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக வாழ்வியல் வழிகாட்டுதல் பயிற்சிக்கு வாழப்பாடி உட்கோட்ட போலீஸ் துறை சார்பில் சமூகக் கல்வி வழிகாட்டுதல் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) வாழப்பாடி அருகே சேசன்சாவடி வசந்தம் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் திரைப்பட நடிகர் தாமு மற்றும் கல்வியாளர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். கருத்தரங்கிற்கு வந்து செல்ல மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு வாகன வசதியும், உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் தவறாமல் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கிராமங்களில் பள்ளிச் செல்லும் சிறுமிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையை காணமுடிகிறது.

Tags:    

Similar News