உள்ளூர் செய்திகள்

ரூ.12 லட்சம், 25 பவுன் நகைகளை அபகரித்த சகோதரர் மீது தங்கை புகார்

Published On 2023-10-01 14:10 IST   |   Update On 2023-10-01 14:10:00 IST
  • பெரியண்ணன்பிள்ளை காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த ஒரு பெண் அன்ன தானப்பட்டி போலீசில் புகார் ஒன்று அளித்தார்.
  • எனக்கு தெரியாமலேயே எனது சகோதரர் டெபாசிட் செய்யப்பட்ட பணம், நகை, வெள்ளிப் பொருட்களை எடுத்துக்கொண்டு தற்போது அவற்றை தர மறுக்கிறார்.

சேலம்:

சேலம் தாதகாப்பட்டி பெரியண்ணன்பிள்ளை காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த ஒரு பெண் அன்ன தானப்பட்டி போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது தந்தையின் குடும்ப சொத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரொக்கப் பணம் ரூ. 12 லட்சம் மற்றும் 25 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை தாதகாப்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்ய முடிவு செய்தேன். அதன் படி கடந்த மே மாதம் வங்கியில் டெபாசிட் செய்தேன். ஆனால் எனக்கு தெரியாமலேயே எனது சகோதரர் டெபாசிட் செய்யப்பட்ட பணம், நகை, வெள்ளிப் பொருட்களை எடுத்துக்கொண்டு தற்போது அவற்றை தர மறுக்கிறார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக உள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இது குறித்து அன்னதா னப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News