உள்ளூர் செய்திகள்

ஆடிப் பண்டிகையை முன்னிட்டுபெரியாம்பட்டியில் எருதாட்டம் கோலாகலம்

Published On 2023-07-18 06:38 GMT   |   Update On 2023-07-18 06:38 GMT
  • ஆடி மாதம் 1 தேதி அன்று சிறப்பு பூஜைகள் செய்து ஊர் முக்கி யஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு காளைகளுக்கு மாலை சந்தனமிட்டு எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
  • விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காளைகளைப் பிடித்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகில் உள்ள பெரியாம்பட்டியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 1 தேதி அன்று சிறப்பு பூஜைகள் செய்து ஊர் முக்கி யஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு காளைகளுக்கு மாலை சந்தனமிட்டு எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 50க்கும் மேற்பட்ட காளைகளை தாரமங்கலம் சந்தைப் ேபட்டை பகுதியில் கட்டி வைத்து காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு பெரியாம்பட்டியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இங்கு நேற்று பகல் 1 மணி அளவில் தொடங்கிய எருதாட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காளைகளைப் பிடித்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

எரு தாட்டத்தை காண பெரியாம்பட்டி புளிய மரத்து காடு நங்கிரிபட்டி ஏரிக்காடு சீராய் கடை மேட்டுக்காடு சிக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் திரண்டு வந்து பார்வையிட்டனர். எருதுகள் பொதுமக்கள் கூட்டத்தில் புகுந்த போது பெருமாள்.(60 )என்ற முதியவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News