உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் கலெக்டர் கார்மேகம் பேசிய காட்சி.

ஆத்தூர் வனக்கோட்டத்தின் சார்பில்நாட்டு வைத்தியர்கள் கருத்தரங்கம்

Published On 2023-07-10 12:23 IST   |   Update On 2023-07-10 12:23:00 IST
  • தமிழ்நாடு வனத்துறை, ஜப்பான் இன்டர்நேசனல் கோப்ப ரேட்டிவ் ஏஜென்சி இணைந்து”நாட்டு வைத்தி யர்கள்‌ கருத்தரங்கம்‌“ கலெக்டர் கார்மேகம்‌ தலை மையில்‌ ஆத்தூர்‌ கிரீன்‌ பார்க்‌ பள்ளியில் நடை பெற்றது.
  • தமிழ்நாட்டின்‌ இயற்கை யுடன்‌ இணக்கமான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பது கருத்தரங்கின் நோக்கமாகும்‌.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம், ஆத்தூர் வனக்கோட்டத்தின் சார்பில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வனத்துறை, ஜப்பான் இன்டர்நேசனல் கோப்ப ரேட்டிவ் ஏஜென்சி இணைந்து"நாட்டு வைத்தி யர்கள் கருத்தரங்கம்" கலெக்டர் கார்மேகம் தலை மையில் ஆத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் நடை பெற்றது.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விட மேம்பாடு, காடு வளர்ப்பு மற்றும் நிறுவன திறன் மேம்பாடு ஆகி யவற்றின் மூலம் பல்லுயிர்ப் பாதுகாப்பை மேம்படுத்து வது, அதன். மூலம் தமிழ்நாட்டின் இயற்கை யுடன் இணக்கமான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பது கருத்தரங்கின் நோக்கமாகும்.

கருத்தரங்கில் தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட பாரம்பரிய வைத்தியர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்ற னர். இதில் ஆத்தூர் மாவட்ட வண அலுவலர் சுதாகர் உள்ளிட்ட தொடர்பு டைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News