உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் பேசிய காட்சி.

நட்டுவம்பாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-10-17 09:39 GMT   |   Update On 2023-10-17 09:39 GMT
  • அரசு மேல்நிலைப் பள்ளியில் ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் நிலையம் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார்.

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.எஸ். நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் நிலையம் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் நிஷாந்த், சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தண்டவாள பகுதியில் மாணவர்கள் விளையாட வேண்டாம். உரிய பாதையை பயன்படுத்த வேண்டும். தண்டவாள பகுதியை தாண்டி செல்ல வேண்டாம். சிக்னலை மதித்து நடக்க வேண்டும். செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க கூடாது. தண்டவாளப் பகுதியில் கற்கள் வைத்து விளையாடுவதும், ஓடும் ரயில் மீது கற்களை எரிந்து விளையாடுவதும் கூடாது. அது தண்டனைக்குரிய குற்றம் என எடுத்துக் கூறி மாணவர்களுடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் ஆனந்தன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News