உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக சரிவு

Published On 2023-12-01 09:52 GMT   |   Update On 2023-12-01 09:52 GMT
  • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
  • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

சேலம்:

தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 3771 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3030 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து திறக்கப் படும் தண்ணீரை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 66.23 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 66.51 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 29.77 டி.எம்.சி. யாக உள்ளது.

Tags:    

Similar News