உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கி உருக்குலைந்து போன தனியார் ஆம்னி பஸ்

வாழப்பாடியில் இன்று அதிகாலை லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதல்

Published On 2023-05-30 07:27 GMT   |   Update On 2023-05-30 07:27 GMT
  • சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு சேலம் மாவட்டம் வாழப்பாடி வழியாக கோவைக்கு சென்றது. அந்த பஸ்சில் 27 பயணிகள் பயணம் செய்தனர்.
  • எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியது.

வாழப்பாடி:

சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு சேலம் மாவட்டம் வாழப்பாடி வழியாக கோவைக்கு சென்றது. அந்த பஸ்சில் 27 பயணிகள் பயணம் செய்தனர். ஆம்னி பஸ்சை கேரள மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் நெப்போலியன் ரமேஷ் ஓட்டிச் சென்றார்.

லாரி மீது மோதல்

ஆம்னி பஸ் இன்று அதிகாலை, வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் மேம்பாலத்தில், சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியது.

இந்த விபத்தில் ஆம்னி பஸ்சின் இடது புறம் முழுவ துமாக சேதம் அடைந்தது. பஸ்சில் தூங்கியவாறு பயணம் செய்து கொண்டி ருந்த கோவையை சேர்ந்த பிரபு(38), ரித்திக், சிவகங்கை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த உதயா(19), கோவை ஆலடிப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது மனைவி பார்வதி(51) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வாழப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த வர்களை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விபரங்கள் குறித்து வாழப்பாடி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News