உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு முகாமில் பட்டதாரிகள் குவிந்தனர்

Published On 2023-08-05 09:19 GMT   |   Update On 2023-08-05 09:19 GMT
  • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இன்று‌ சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
  • முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இன்று சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு,மருத்துவம், கட்டுமானம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.

இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

அவர்களில் சிலருக்கு சில நிறுவனத்தினர் நேர்முக தேர்வை உடனடியாக நடத்தினர்.

இந்த முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியும் உள்ளவர்கள் பங்கேற்றனர்

மேலும் அடுத்த கட்டமாக 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை எடப்பாடி மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இன்றைய முகாமில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு வேலைவாய்ப்புக்கான ஆணைகளை வழங்கினார்.

Tags:    

Similar News