உள்ளூர் செய்திகள்

மேட்டூர் காவிரி கரையோரத்தில் பரவிய தீயால் பரபரப்பு

Published On 2023-10-05 09:35 GMT   |   Update On 2023-10-05 09:35 GMT
  • மேட்டூர் அணையின் 16 கண் உபரிநீர் போக்கி கால்வாயின் கரையோரத்தில் நேற்று மாலை திடீரென தீ பரவியது.
  • கால்வாயின் கரையோரம் இருந்த கோரை புற்கள் மற்றும் கழிவுகள் இந்த தீயில் கொழுந்து விட்டு எரிந்தது.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பூலாம்பட்டி செல்லும் மேட்டூர் அணையின் 16 கண் உபரிநீர் போக்கி கால்வாயின் கரையோரத்தில் நேற்று மாலை திடீரென தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. கால்வாயின் கரையோரம் இருந்த கோரை புற்கள் மற்றும் கழிவுகள் இந்த தீயில் கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால் மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி வழியாக எடப்பாடி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், நடந்து சென்ற மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதுகுறித்து மேட்டூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

காவிரி கரையோர பகுதிகளில் ரசாயன கழிவுகள் கொட்டுவதால் இதுபோன்ற தீ விபத்து ஏற்படும்போது பொதுமக்களுக்கு மூச்சு திணறல், சுவாசக்கோளாறு மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News