உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தனியார் வங்கி ஊழியர் சாவு
- நவீன் (33). இவர் சேலத்தில் உள்ள தனியார் வங்கியில் கலெக்ஷன் பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.
- இந்த நிலையில் நேற்று நவீன் மோட்டார் சைக்கிளில் அங்கம்மாள் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் போட்டுள்ளார்.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி அருகே அங்கம்மாள் காலனி ஆதிசக்திபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன் (33). இவர் சேலத்தில் உள்ள தனியார் வங்கியில் கலெக்ஷன் பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று நவீன் மோட்டார் சைக்கிளில் அங்கம்மாள் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த நவீன் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி
விழுந்து தனியார் வங்கி ஊழியர் சாவு