உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள். 

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

Published On 2023-10-10 09:32 GMT   |   Update On 2023-10-10 09:32 GMT
  • மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
  • இங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலைய ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 40 பேர், நேற்று மாலை திடீரென அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாதம் 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதனை 30 நாட்களாக அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். ஒரு மாத ஊதியத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் அனல் மின் நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அனல் மின் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News