உள்ளூர் செய்திகள்

தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தபோது எடுத்த படம்.

ஜலகண்டாபுரத்தில் விவசாய சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம்

Published On 2023-07-13 09:22 GMT   |   Update On 2023-07-13 09:22 GMT
  • விவசாயிகள் சங்கம் சார்பில் ஜலகண் டாபுரம் பேருந்து நிலையத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
  • போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.

நங்கவள்ளி:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜலகண்டாபுரம் பேருந்து நிலை யத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.

இதில் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 கொள்முதல் செய்ய வேண்டும், அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும், சேலம் மாவட் டத்தில் நிபந்தனை இன்றி விவசாயிகளிட மிருந்து தேங்காய் கொப்பரையை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி, வரியை ரத்து செய்ய வேண்டு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட் டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News