உள்ளூர் செய்திகள்

திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதியினருடன், அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரநிதிகள்.

பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில்7 ஜோடிக்கு இலவச திருமணம்

Published On 2023-07-08 08:52 GMT   |   Update On 2023-07-08 08:52 GMT
  • வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
  • புது மணத் தம்பதியருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசை வழங்கி திரு மணத்தை நடத்தி வைத்தனர். நிறைவாக, புதுமணத் தம்பதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது.

வாழப்பாடி:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திருக்கோவில்களில் எளி யோருக்கு இலவச திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ், சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை சார்பில், வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

சேலம் மண்டல இணை ஆணையர் சபர்மதி, உதவி ஆணையர் ராஜா, வாழப் பாடி வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி.சக்கர வர்த்தி, பேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி பாலாஜி, துணைத்தலைவர் பேபி, தி.மு.க. நகர செயலா ளர் சுப்பிரமணியன், செயல் அலுவலர் கஸ்தூரி, ஆய்வா ளர் சங்கர் ஆகியோர் புது மணத் தம்பதியருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசை வழங்கி திரு மணத்தை நடத்தி வைத்தனர். நிறைவாக, புதுமணத் தம்பதி கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு திருமண விருந்து வழங்கப் பட்டது.

அரசு சார்பில் தங்கத்தா லியுடன் திருமணம் நடத்தி வைத்ததோடு, புதிய குடித் தனத்திற்கு தேவையான அனைத்து சீர்வரிசைகளும் வழங்கப்பட்டன. இதற்கு தமிழக அரசுக்கு புதுமணத் தம்பதிகளும், பெற்றோர்க ளும் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News