வீரகனூரில் கால்நடை சந்தையில்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
- சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது கால்நடை சந்தை சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
- இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை என்பதால் அதிகளவில் விற்பனைக்காக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள் என பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது கால்நடை சந்தை சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. மேலும்
சனிக்கிழமை நடைபெறும் கால்நடை சந்தையில் பல்வேறு பகுதிலிருந்தும் ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை என்பதால் அதிகளவில் விற்பனைக்காக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள் என பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் ஆடுகளளை உள்ளூர், மட்டுமின்றி பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, மதுரை ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்தனர். மேலும் இன்று நடைபெற்ற கால்நடை சந்தையில் சுமார் 5000 ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் ஆடுகளின் விலை ரூ.3ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது சுமார் ரூ.3 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
60 கிலோ எடையுள்ள ஆடு ஒன்று 20ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.