சேலம் கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
சேலம் கோட்டையில் கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரதம்
- சேலம் கோட்டையில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் சேலம் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் ஜெயச்சந்திரன், பன்னீர்செல்வம், அழகிரி, மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சேலம்:
சேலம் கோட்டையில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் சேலம் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் ஜெயச்சந்திரன், பன்னீர்செல்வம், அழகிரி, மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 6-வது ஊதிய குழுவில் கால்நடை ஆய்வாளர் நிலை 1 மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை பெற்றிட சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை சங்க கோரிக்கையின் வழி அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கால்நடை ஆய்வாளர் சங்க நீண்ட நாள் கோரிக்கையான முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.