உள்ளூர் செய்திகள்
வீராணம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி
- வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் ராஜூ என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது.
- இந்த கிணற்றில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் ராஜூ என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் வீராணம் போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வரைந்து சென்ற தீயணைப்பு துறையினரும், போலீசாரும் இணைந்து கிணற்றில் பிணமாக கிடந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தொழிலாளி போல இருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.