உள்ளூர் செய்திகள்

தேக்கம்பட்டியில் அரசு பஸ் டிரைவரை தாக்கியகல்லூரி பஸ் டிரைவர் கைது

Published On 2023-08-13 08:34 GMT   |   Update On 2023-08-13 08:34 GMT
  • முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (47) இவர் சேலம் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
  • விஜயராகவன் (51) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர், அரசு பஸ் டிரைவர் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

சேலம்:

சேலம் அருகே உள்ள ஓமலூர் முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (47) இவர் சேலம் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சை ஓட்டுனராக செல்வம் தேக்கம்பட்டிக்கு ஓட்டி சென்றார்.

பின்னர் மீண்டும் சேலம் பஸ் நிலையம் வருவதற்காக தேக்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை திருப்பிக் கொண்டிருந்தார்.

தேக்கம்பட்டி அருகே உள்ள காட்டுவளவு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் (51) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர், அரசு பஸ் டிரைவர் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

இந்த திடீர் தாக்குதால் காயம் அடைந்த செல்வம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயராகவனை இன்று காலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட விஜயராகவன் சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News