உள்ளூர் செய்திகள்

ஓடும் காரில் தீ விபத்து; 4 பேர் உயிர் தப்பினர்

Published On 2023-06-19 13:04 IST   |   Update On 2023-06-19 13:04:00 IST
  • ஜான்சன் (வயது 56). இவர், காரில் 4 பேருடன் தண்டாரம்பட்டு பகுதியில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.
  • கார் சேலம் அம்மாபேட்டை பெருமாள் கோவில் மேடு அருகே இரவு வந்தபோது காரில் இருந்து புகை வந்தது. உடனே காரை ஓரமாக நிறுத்தி 4 பேரும் கீழே இறங்கினர்.

சேலம்:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு வி.எம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 56). இவர், காரில் 4 பேருடன் தண்டாரம்பட்டு பகுதியில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது கார் சேலம் அம்மாபேட்டை பெருமாள் கோவில் மேடு அருகே இரவு வந்தபோது காரில் இருந்து புகை வந்தது. உடனே காரை ஓரமாக நிறுத்தி 4 பேரும் கீழே இறங்கினர். அதற்குள் கார் மளமள தீப்பிடித்து எரிந்தது. சுதாரித்துக்கொண்டு உடனடியாக 4 பேரும் கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.

இது குறித்து அம்மா பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News