சேலம் மாநகராட்சி 26-வது டிவிஷன் வி.எம்.ஆர் நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே8 மாதமாக மூடப்படாத குழிகள்
- 26-வது கோட்டம் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
- இந்த பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த 8 மாதத்திற்கு முன்பு வெட்டப்பட்ட குழியை சரிப்படுத்தாத நிலையில் புதிய சாலை அமைத்து தருவதாக கூறி ஏற்கனவே இருந்த சாலையில் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது.
சேலம்:
சேலம் மாநகராட்சி 26-வது கோட்டம் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
மாநகரின் மையப்பகுதி மட்டுமல்லாமல் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இந்த பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த 8 மாதத்திற்கு முன்பு வெட்டப்பட்ட குழியை சரிப்படுத்தாத நிலையில் புதிய சாலை அமைத்து தருவதாக கூறி ஏற்கனவே இருந்த சாலையில் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படாத தால் குழி பறிக்கப்பட்ட நிலையிலேயே இன்று வரை உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கும், வெளியில் இருந்து வீட்டிற்குள் செல்வதற்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் சாலையின் அவலத்தை குறிப்பிடும் விதமாக நோட்டீஸ் ஒட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.