உள்ளூர் செய்திகள்

சைனிக் பள்ளி கலைப்போட்டியில் சந்திராபூர் பள்ளி சாம்பியன்

Published On 2023-02-01 10:19 GMT   |   Update On 2023-02-01 10:19 GMT
  • குழு பாடல், குழு கருவி இசை, ஊமை நாடகம், குறு நாடகம் மற்றும் குழு நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்படன.
  • ஆசிரியர் பால்ராஜ், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உடுமலை :

உடுமலை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 2022- 23ம் கல்வியாண்டின், தேசிய அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட்டது.சைனிக் பள்ளி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியானது முதல்வர் கேப்டன் நிர்மல்ரகு முன்னிலையில் துவங்கியது.

நடுவர்களாக கோவை இயற்கை அறிவியல் கட்டளை இயக்குனர் சீனிவாசன், உடுமலை கேந்திரிய வித்யாலா பள்ளி முதல்வர் சக்ரதாராபிரஸ்டி, சீனிவாசா பள்ளி முதல்வர் சத்தியபாமா செயல்பட்டனர்.இதில் ஆந்திர மாநிலம் கொருகொண்டா, மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர், உத்திரபிரதேசம் மெயின்புரி, பீகார் மாநிலம் நாலந்தா சைனிக் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அவ்வகையில் குழு பாடல், குழு கருவி இசை, ஊமை நாடகம், குறு நாடகம் மற்றும் குழு நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்படன. இதில், சந்திராபூர் சைனிக் பள்ளி, குழு பாடல் மற்றும் குழு இசைக்கருவிக்கான போட்டியில் வெற்றி பெற்றது.கொருகொண்டா சைனிக் பள்ளி, ஊமை நாடகத்திலும், மெயின்புரி சைனிக் பள்ளி குழு நடனத்திலும், நாளந்தா சைனிக் பள்ளி குறு நாடகத்திலும் வெற்றி பெற்றது. அதேநேரம் சந்திராபூர் சைனிக் பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தட்டிச்சென்றது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் தீபு செய்திருந்தார். ஆசிரியர் பால்ராஜ், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News