உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் - பணிகள் தீவிரம்

Published On 2022-06-21 09:04 GMT   |   Update On 2022-06-21 09:04 GMT
  • 27-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது.
  • வேட்புமனு விவரம், உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

திருப்பூர் :

தமிழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரகத்தில் 498 பதவிகள், நகர்ப்புறத்தில் 12 என 510 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ஒன்றியம் -16வது வார்டு, பல்லடம் ஒன்றியம் - 1வது வார்டு, ஊத்துக்குளி ஒன்றியம் - இச்சிபாளையம் ஊராட்சி தலைவர், அவினாநி- அய்யம்பாளையம் ஊராட்சி (6வது வார்டு), குடிமங்கலம் ஊராட்சி - 1வது வார்டு, காங்கயம் -ஆலாம்பாடி 9வது வார்டு, பொங்கலூர் - வடக்கு அவிநாசிபாளையம் 7 வது வார்டு, உடுமலை - அந்தியூர் 2வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.நகர உள்ளாட்சியில் பதவிகள் காலியில்லை. மொத்தம் 8பதவிகளுக்கான தேர்தலுக்கு 30 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வார்டு வாரியாக, வாக்காளர் பட்டியலும் தயார்நிலையில் உள்ளன.

தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர் என 50 பேர் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பல்லடம், அவிநாசி ஒன்றியங்கள், ஊத்துக்குளி இச்சிப்பாளையம் ஊராட்சி, வார்டு தேர்தல் நடக்கும் ஊராட்சி முழுமைக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறுகையில், 27-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. வரும் 28ந்தேதி பரிசீலனை, 30ந் தேதி வரை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்படும். ஓட்டுப்பதிவு ஜூலை 9ந் தேதி காலை,7மணி முதல், மாலை,6மணி வரை நடக்கும். ஓட்டு எண்ணிக்கை, 12-ந் தேதி நடைபெறும். கிராமங்களில் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஒன்றிய அலுவலகம் மற்றும் வார்டு உறுப்பினருக்கு, அந்தந்த ஊராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் நடக்கும். வேட்புமனு விவரம், உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றனர்.

Tags:    

Similar News