உள்ளூர் செய்திகள்

மின்னல் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கிய காட்சி.

பாளையங்கோட்டை அருகே மின்னல் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல்- உதவித்தொகையும் வழங்கினார்

Published On 2022-11-01 14:49 IST   |   Update On 2022-11-01 14:49:00 IST
  • லெட்சுமி இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  • ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. லெட்சுமியின் மகன்களை சந்தித்து ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கினார்.

நெல்லை:

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை ஒன்றியம், பாளை கிழக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட உடையார்குளம் பஞ்சாயத்தில் உள்ள வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி (வயது 55). ஏழை விவசாயியான இவர் சில தினங்களுக்கு முன்பு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு சென்று அழைத்து வரும்போது இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. வாகைகுளம் கிராமத்திற்கு நேரில் சென்று குடும்ப தலைவியை இழந்து தவிக்கும் அப்பெண்ணின் மகன்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவித்தொகையும் வழங்கினார்.

அவருடன் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி,மூத்த காங்கிரஸ் தலைவர் புத்தனேரி சண்முகம்,மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பாளையங்கோட்டை வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் இட்டமொழி நம்பித்துரை, இளைஞர் காங்கிரஸ் நாங்குநேரி தொகுதி தலைவர் ராஜ்குமார், உடையார்குளம் பஞ்சாயத்து காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் உச்சிமாகாளி, கிராம காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் சங்கரகோனார், முத்துபாண்டி, கண்ணன் மற்றும் வாகைகுளம் ஊர் பெரியவர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News