உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் ரூ.85 ஆயிரம் 'அபேஸ்'
- புதியமுத்தூரில் உள்ள வங்கியில் சித்ரா ரூ.85 ஆயிரம் எடுத்துக் கொண்டு தூத்துக்குடி வந்தார்.
- இது குறித்து மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஓட்டப் பிடாரம் அருகே உள்ள தெற்கு வெள்ளாரத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மனைவி சித்ரா (வயது 55).
இவர் புதியமுத்தூரில் உள்ள வங்கியில் அவரது கணக்கில் இருந்து ரூ.85 ஆயிரம் எடுத்துக் கொண்டு தூத்துக்குடியில் உள்ள அவரது மகனை பார்க்க சென்றுள்ளார். பணத்தை கையில் இருந்த பையில் வைத்திருந்தார். பின்னர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்வதற்காக பஸ்சில் ஏறி அமர்ந்த போது தனது பையில் இருந்த ரூ.85 ஆயிரம் பணம் காணாமல் போய் இருந்தது.
இதனால் பதறிப்போன சித்ரா இது குறித்து மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் இசக்கி யப்பன் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.