உள்ளூர் செய்திகள்

பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜையை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை தொடங்கி வைத்த காட்சி.


ஆய்க்குடி பேரூராட்சியில் ரூ.53 லட்சத்தில் வளர்ச்சி பணி

Published On 2022-06-28 06:52 GMT   |   Update On 2022-06-28 06:52 GMT
  • முதல் கட்டமாக காவல் நிலையம் முன்பு பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
  • நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

கடையநல்லூர்:

ஆய்க்குடி பேரூராட்சியில் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமாக காவல் நிலையம் முன்பு பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஆய்க்குடி, அகரகட்டு, கம்பிளி பகுதிகளில் சின்டெக்ஸ் தொட்டிகள், பயணிகள் நிழல் குடை, கழிவுநீர் ஓடை, வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ. 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையம் முன்பு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான், ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ், பேரூராட்சி துணை தலைவர் மாரியப்பன், ஆய்க்குடி தி.மு.க. பேரூர் செயலாளர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News