உள்ளூர் செய்திகள்

மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.40

Published On 2023-08-07 12:50 IST   |   Update On 2023-08-07 12:50:00 IST
  • தட்பவெப்பநிலை மாற்றத்தால் தக்காளி செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்ததால் விளைச்சல் மிகவும் பாதிப்படைந்தது.
  • கடந்த 1 மாதத்துக்கும் மேலாக 1 கிலோ தக்காளி அதிக பட்சமாக கிலோ ரூ.120க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம், சாலைப்புதூர், அம்பிளிக்கை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி அதிகம் பயிரிடப்படுகிறது. தட்பவெப்பநிலை மாற்றத்தால் தக்காளி செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்ததால் விளைச்சல் மிகவும் பாதிப்படைந்தது.

இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து 4-ல் ஒரு பங்காக குறைந்தது. கடந்த 1 மாதத்துக்கும் மேலாக 1 கிலோ தக்காளி அதிக பட்சமாக கிலோ ரூ.120க்கு விற்பனையானது. கடந்த வாரம் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.1500க்கு விற்பனையானது.

இந்நிலையில் தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் 1 கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News