உள்ளூர் செய்திகள்

பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிகளை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

சங்கரன்கோவில் அருகே ரூ. 30 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம்-ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

Published On 2023-08-25 14:14 IST   |   Update On 2023-08-25 14:14:00 IST
  • கீழநீலிதநல்லூர் கிராமத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
  • நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் பாபு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழநீலிதநல்லூர் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். கீழநீலிதநல்லூர் ஊராட்சி தலைவர் கோதை அம்மாள் பாபு முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் பாபு, மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், மாவட்ட ஆதி திராவிடர் நல தலைவர் ராஜ் என்ற கருப்பசாமி, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் தனசேகரன், மாவட்ட பிரதிநிதி சண்முக பாண்டியன், ஊராட்சி துணைத் தலைவர் ஜானகி, கிளை செயலாளர்கள் முத்துராமலிங்கம், ராஜேந்திரன், மைனர்சாமி, பரஞ்சோதி, தங்கத்துரை, இளைஞர் அணி சிவா, மாதவன், பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News