சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்த காட்சி.
மருதம்புத்தூர், புதுப்பட்டி பஞ்சாயத்துகளில் ரூ.17.50 லட்சம் செலவில் திட்டப்பணிகள்- சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்
- தொடக்க விழாவுக்கு பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரி வண்ணமுத்து தலைமை தாங்கினார்.
- புதிய குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியினையும் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம்அருகே மருதம்புத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதன் பணி தொடக்க விழா நடந்தது.
பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரி வண்ணமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர்கள் சண்முக ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் திலகர்ராஜ் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு ரூ.12 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதுப்பட்டி பஞ்சாயத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பட்டியில் இருந்து காமராஜ் நகருக்கு புதிய குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியினையும் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
இதில் தொழிலதிபர் மணிகண்டன், புதுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலவிநாயகம், துணைத் தலைவர் வேல் துரை, ஓடைமறிச்சான் பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் திராவிட மணி, ஒன்றிய பொருளாளர் சண்முக சுந்தரம், வார்டு உறுப்பினர் சங்கீதா, இயேசுராஜன், சிவலார்குளம் முத்தையா, மருதம்புத்தூர் கிளை செயலாளர் அருணாச்சலம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ராஜேஷ் நன்றி கூறினார்.