உள்ளூர் செய்திகள்

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.


உடன்குடியில் கணவனை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1.50 லட்சம் உதவி-ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2022-07-25 08:56 GMT   |   Update On 2022-07-25 09:44 GMT
  • கணவரை இழந்த ஜெயா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உதவி கேட்டு மனு கொடுத்தார்.
  • தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஜெயாவுக்கு காசோலை வழங்கினார்.

உடன்குடி:

திருச்செந்தூர் அருகே உள்ள கீழ நாலு மூலை கிணறு பகுதியை சேர்ந்த ஜெயா என்பவருக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இவருடைய கணவர்கடந்த 2021-ல் இறந்துவிட்டார். கணவரை இழந்த ஜெயா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உதவி கேட்டு விண்ணப்பம் மனு கொடுத்தார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆசாத் கோரிக்கையை ஏற்று ஆவண உதவி செய்வதாக உறுதியளித்தார்.

அதன் அடிப்படையில் ஜெயா குடும்பத்திற்கு ரூ. 1.50 லட்சம் உடன்குடி வங்கியில் வரைவோலையாக காசோலை எடுக்கப்பட்டு ஜெயாவின் மகன் 8-ம் வகுப்புபடித்து வரும் ரூபனுக்கு (வயது12) ரூபன் பெயரில் டெபாசிட் செய்து அதன் நகலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஜெயாவுக்கு வழங்கினார்.

உடன்குடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜோசப் நோலாஸ்கோ, மாவட்ட தலைவர் ஆசாத், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஐப்ரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உடன்குடி நகர பொருளாளர் அமித்அரசுமீரான், காயல் நகரச் செயலாளர் ஹசன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொன்டனர்.

Tags:    

Similar News