உள்ளூர் செய்திகள்

மண்ணடியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Published On 2022-07-19 09:51 GMT   |   Update On 2022-07-19 09:51 GMT
  • கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
  • பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை:

மண்ணடி, பிராட்வே, பாரிமுனை, பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதையடுத்து மண்டல அலுவலர் வேல்முருகன், பகுதி சுகாதார அலுவலர் மாப்பிள்ளைதுரை மற்றும் அதிகாரிகள் மண்ணடி, பிடாரியார் கோயில் தெருவில் லாரிகள் மூலம் பார்சல் அனுப்பும் அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள இரண்டு டன் பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரிந்தது. அவை வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்தப் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News