உள்ளூர் செய்திகள்

விதி மீறி இயக்கப்பட்ட 1244 ஆம்னி பஸ்களுக்கு ரூ.23.16 லட்சம் அபராதம்- அரசு அதிரடி நடவடிக்கை

Published On 2023-10-06 04:24 GMT   |   Update On 2023-10-06 04:24 GMT
  • செப்.27 முதல் அக்.3-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களில் சோதனை நடைபெற்று உள்ளது.
  • 8 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

ஆம்னி பஸ்கள் மீது வரும் புகார்களை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது. அண்மையில் தொடர் விடுமுறை விடப்பட்டதையொட்டி, செப்.27 முதல் அக்.3-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களில் சோதனை நடைபெற்று உள்ளது.

இதில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது, அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்தியிருந்தது, அதிக ஒளி வீசும் முகப்பு விளக்கு பொருத்தியது, ஓட்டுநர் 'சீட்' பெல்ட் அணியாதது, முதலுதவி பெட்டி இல்லாதது, பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டாதது, உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்பட்ட ஆம்னி பஸ்கள், வரி செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக 7,446 பஸ்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதில் விதிமீறி இயக்கப்பட்ட 1,244 பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு ரூ.23.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதில், ரூ.18.26 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதோடு, 8 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்ட தாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News