உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட கண்ணன்.

கடலூரில் ரவுடி கொலை கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

Published On 2022-07-26 06:37 GMT   |   Update On 2022-07-26 06:37 GMT
  • கடலூரில் ரவுடி கொலை கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த சம்பவத்தில் கண்ணன்ரத்த வெள்ளத்தில் பிணமா னார். ரேவன், மூர்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர்: 

கடலூர் திருப்பாதிரி புலியூர் போலீஸ் சரகம் கம்மியம்பேட்டை பிடாரி–யம்–மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பு என்கிற கண்ணன் (வயது 26). பிரபல ரவுடி. இவர் நேற்று மாலை கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ். வெங்கடேசன் நகரில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் மோட்டார் சை்ககிளில் அங்கு வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்க வந்த கண்ணனின் நண்பர்கள் வன்னியர்பாளையம் மேட்டுத் தெருவை சேர்ந்த ரேவன் (25), கம்மியம் பேட்டையை சேர்ந்த மூர்த்தி (22). ஜீவானந்தம் (22) ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. அதன் பின்பு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த சம்பவத்தில் கண்ணன்ரத்த வெள்ளத்தில் பிணமா னார். ரேவன், மூர்த்தி ஆகியோர் படு–காயம் அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ ேபால பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். 

தகவல் அறிந்த கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கல் பாரிசங்கர், திருப்பாதிரி–புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்த கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத–னைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி–வைத்தனர். படுகாயம் அடைந்த ரேவன், மூர்த்தி ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்தி–ரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கள். இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பழிக்கு–பழியாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய–வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த 19.8.2020-ம் ஆண்டு திருப்பாதிரிபுலியூர் பகுதியை சேர்ந்த காம–ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கண்ணன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணன் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை காமராஜ் சகோதரர் சிவாஜி, அவரது நண்பர்கள் சந்திரசேகர், விக்னேஷ், சூர்யபிரதாப் ஆகியோர் நோட்டமிட்டுள்ளனர். நேற்று கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் நகரில் கண்ணன் இருப்பதை அறிந்த சிவாஜி மற்றும் அவரது நண்பர்கள் இந்த கொலையை செய்துள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் சென்னை, காஞ்சீபுரம், புதுவை ஆகிய பகுதிக்கு தனித்தனியாக விரைந்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News