உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூரில் வங்கி வாசலில் முதியவரிடம் ரூ.2.36 லட்சம் கொள்ளை: பட்டப்பகலில் துணிகரம்

Published On 2023-03-16 15:17 IST   |   Update On 2023-03-16 15:17:00 IST
  • அப்துல் ரஷித் (வயது 61). இவர் திருவெண்ணைய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 8 பவுன் தங்க நகையை இன்று காலை 11.30 மணியளவில் அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் பெற்றார்.
  • வீட்டில் வந்து ஸ்கூட்டியை திறந்து பார்த்த போது பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. இதனைக் கண்டு அப்துல் ரஷித் அதிர்ச்சியடைந்தார்.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் பள்ளி வாசல் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷித் (வயது 61). இவர் திருவெண்ணைய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 8 பவுன் தங்க நகையை இன்று காலை 11.30 மணியளவில் அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் பெற்றார். பணத்தை கைப்பையில் வைத்து வங்கியிலிருந்து வெளியில் வந்தார். அங்கு நிறுத்தியிருந்த அப்துல் ரஷித் (வயது 61). இவர் திருவெண்ணைய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 8 பவுன் தங்க நகையை இன்று காலை 11.30 மணியளவில் அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் பெற்றார்.இவரது வங்கி கணக்குப் புத்தகத்தை வங்கியிலேயே வைத்து விட்டு வந்தது அப்போது தான் அவருக்கு நினைவுக்கு வந்தது. மீண்டும் வங்கிக்குள் சென்று வங்கி புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். வீட்டில் வந்து ஸ்கூட்டியை திறந்து பார்த்த போது பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. இதனைக் கண்டு அப்துல் ரஷித் அதிர்ச்சியடைந்தார்.   உடனடியாக திருவெண்ணைய்நல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்படி சம்பவ நடந்த இந்தியன் வங்கிக்கு போலீசார் விரைந்து வந்தனர். அங்குள்ள சி.சி.டி.வி. வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பட்டப்பகலில் வங்கி வாசலில் பணம் கொள்ளை போன சம்பவம் திருவெண்ணைநல்லூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News