விருத்தாசலத்தில் உள்ள சாலைகளின் ஓரம் கயிறு பதிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபடுவதை படத்தில் காணலாம்.
விருத்தாசலத்தில் போக்குவரத்தை சரிசெய்ய சாலையோரம் கயிறு பதிக்கும் பணி
- மோட்டார் சைக்கிள்களை பொது மக்கள் நிறுத்தி செல்கின்றனர்.
- கயிறு பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம், ஜூன்.25-
விருத்தாசலத்தில் நாளுக்கு நாள் போக்கு வரத்து நெரிசல் பெருகி க்கொண்டே செல்கிறது. சாலையோரம் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களை பொது மக்கள் நிறுத்தி செல்கின்றனர்.
இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்படி, விருத்தாசலம் துணை சூப்பிரண்டு ஆரோக்கி யராஜ் அறிவுறுத்தலின்படி, இன்ஸ்பெக்டர் முருகேசன் கண்காணிப்பில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பாலக்கரை, கடைவீதி, விருத்தகிரீஸ்வரர் கோவில் மாடவீதிகள் உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் கயிறு பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். விதிகளை மீறி சாலையோர கயிற்றுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.