உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே பஸ் வசதி கேட்டு வ.மேட்டூர் கிராம மக்கள் அரசு பஸ்சினை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி அருகே பஸ் வசதி கேட்டு சாலைமறியல்

Published On 2022-12-13 06:59 GMT   |   Update On 2022-12-13 06:59 GMT
  • வ.மேட்டூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
  • பஸ் வசதி வேண்டுமெனக் கூறி சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுப்பாக்கம் அருகே உள்ள வ.மேட்டூர் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பஸ் வசதி இதுவரை செய்து தரவில்லை. இதனால் தங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், அத்தியாவசிய தேவைக்காக வெளியூர் செல்லும் சிறு, குறு விவசாயிகள், வணிகர்கள் பஸ்சிற்காக 1 கிலோமீட்டர் நடந்து சென்று பனையாந்தூர் அல்லது வள்ளிமதுரம் கிராமத்திற்கு சென்று பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் தங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டுமெனக் கூறி இன்று காலை திட்டக்குடியில் இருந்து நைனார்பாளையம் வரை செல்லும் அரசு பஸ்சை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறைப்பிடித்து திடீரென சாலை மறியல் போராட்டம் செய்தனர். தொடர்ந்து சாலை மறியல் நடந்த இடத்திற்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் வெளியூருக்கு செல்வதற்காக பஸ்சில் காத்திருந்த பயணிகளின் நலன் கருதி தாங்களாகவே போராட்டத்தை கைவிட்டு பஸ்சை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் பஸ் வசதி செய்து தரவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரித்தனர்.

Tags:    

Similar News