உள்ளூர் செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

செந்துறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

Published On 2022-10-28 10:49 IST   |   Update On 2022-10-28 10:49:00 IST
  • சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
  • 100-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

செந்துறை:

நத்தம் அருகே செந்துறை சந்தைப்பேட்டையில் தனியார் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் சவரிமுத்துகொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் பங்குத்தந்தை இன்னாசிமுத்து, பள்ளிதாளாளர் பிரிட்டோ, பள்ளி முதல்வர் மரிய பிரான்சிஸ் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைகவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் இயக்கக் கூடாது, சாலை விதிகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு 100-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News