உள்ளூர் செய்திகள்

அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வாரம் கொண்டாட்டம்

Published On 2023-10-07 14:42 IST   |   Update On 2023-10-07 14:42:00 IST
  • மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
  • அக்டோபர் 11-ந்தேதி பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டம்

கோவை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்டம் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்ட வாரம் கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், கோவை கோட்ட மேலாண் இயக்குநர் ஜோசப் டையஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், கோவை கோட்டம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்- 2005 விழிப்புணர்வு வாரம் அக்ேடாபர் 5 முதல் 12 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

அதன் தொடக்கமாக, கோவை தலைமை அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, ஈரோடு, திருப்பூர் மற்றும் ஊட்டி மண்டலங்களிலும் விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, அக்டோபர் 8-ந் தேதி நாளை விழிப்புணர்வு மாரத்தான், நடைப்பயணம் நடைபெற உள்ளது.

இந்தப் பேரணியானது, கோவை அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கி, கவுண்டம்பா ளையம், சேரன் மாநகர் வழியாக மீண்டும் அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நிறைவு பெறவுள்ளது. அதே நாள் பொள்ளாச்சியிலும் விழிப்புணர்வு நடைப்ப யணம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில், பொதுமேலாளர்கள், துணை மேலாளர்கள், பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மாரத்தான், நடைப்பயணத்தை நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். கோவை தலைமையகத்தில் அக்டோபர் 11-ந் தேதி பணியாளர்களுக்கு தகவல் உரிமைச் சட்டப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News