உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
மதிப்பெண் சான்றிதழில் திருத்தம்: மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
- பணியில் சேர்ந்தபோது வழங்கிய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பார்த்தபோது அதில் மதிப்பெண் திருத்தப்பட்டி ருந்தது தெரியவந்தது.
- 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்ப த்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் கூடலூர் மின்வாரிய உதவிபொறியாளர் அலுவலகத்தில் கணக்கீட்டு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இதேபோல சின்ன மனூர் கோட்டப்பொறி யாளர் அலுவலகத்தில் ஒரு பெண் ஊழியர், தேனி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒரு ஆண் ஊழியரும் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் 3 பேரும் பணியில் சேரும்போது கொடுத்த சான்றிதழ்களில் மதிப்பெண் திருத்தப்பட்ட தாக புகார் எழுந்தது. அதன்படி இவர்கள் பணியில் சேர்ந்தபோது வழங்கிய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பார்த்தபோது அதில் மதிப்பெண் திருத்தப்பட்டி ருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.