உள்ளூர் செய்திகள்

ஆய்வு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்


தூத்துக்குடி மாநகராட்சியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் - கமிஷனர் சாருஸ்ரீ பங்கேற்பு

Published On 2022-11-17 09:26 GMT   |   Update On 2022-11-17 09:30 GMT
  • வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பதன் அவசியம் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
  • 100 சதவீத இலக்கினை எய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பணி முன்னேற்ற ஆய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பதன் அவசியம் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் இம்மாத இறுதிக்குள் 100 சதவீத இலக்கினை எய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் செல்வகுமார் மற்றும் தேர்தல் பணி தொடர்பான துறை சார்ந்த அலுவலர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News