உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்துறை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்

Published On 2023-03-23 14:47 IST   |   Update On 2023-03-23 14:47:00 IST
  • வாழ்வாதார கோரிக்கை களை தாமதப்படுத்துவதாக கூறி தமிழக அரசை கண்டித்து வருவாய் துறை அலுவலர்கள் இன்று விடுப்பு எடுத்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.
  • நெல்லை மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

வாழ்வாதார கோரிக்கை களை தாமதப்படுத்துவதாக கூறி தமிழக அரசை கண்டித்து வருவாய் துறை அலுவலர்கள் இன்று விடுப்பு எடுத்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகளான சான்றிதழ் வழங்குவது, பட்டா வழங்குவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.

அப்போது அவர்கள் கூறும் போது, வருவாய்த் துறையில் துணை கலெக்டர் நிலையில் பதவி உயர்வு வழங்கும் பட்டியலை கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசு வெளியிடாமல் இருப்பதால் பலர் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பே ஓய்வு பெறும் நிலை உள்ளது.

இதே போல் பல ஆண்டு களாக துணை தாசில்தாராக பணி செய்து வருபவர்கள் பட்டியல் திருத்தங்களின் காரணமாக முதல் நிலை வருவாய் ஆய்வாளராக பணி இறக்கம் செய்யும் நடைமுறையை மாற்றம் செய்ய வேண்டி வருவாய் துறை அலுவலர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி கடந்த ஆகஸ்டு மாதம் வருவாய் துறை அமைச்சரு டன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் பல மாதங் களாகியும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே முதல்-அமைச்சர் உடனடியாக இதில் தலை யிட்டு வருவாய்துறை அலுவ லர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும்.

இதை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். நெல்லை கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு வருவாய் துறை அலுவல கங்களில் பெரும்பாலான அலுவலர்கள் வராததால் அலுவலகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News