உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் இருசக்கர வாகனம் திருட்டு

Published On 2023-08-04 15:33 IST   |   Update On 2023-08-04 15:33:00 IST
  • நேற்று தனது இருசக்கர வாகனத்தை அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி அருகில் விட்டு கடைக்கு சென்றார்.
  • பின்னர் வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணவில்லை.

அரூர்,

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள வெளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது74). ஓய்வு பெற்ற போலீஸ்காரரான இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தை அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி அருகில் விட்டு கடைக்கு சென்றார்.

பின்னர் வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணவில்லை. இதனால் பதறி போன அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் அரூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News