உள்ளூர் செய்திகள்

சின்னசேலத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரிதுப்புரவு பணியாளர்கள் போராட்டம்

Published On 2023-03-29 10:53 IST   |   Update On 2023-03-29 10:53:00 IST
  • துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் தோறும் வழங்கக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • உடனடியாக துப்புரவு பணியாளருக்கு உபகரணம் வழங்கவில்லை என்றால் விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து கலைந்து சென்றனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் பணி செய்யும் சுமார் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் தோறும் வழங்கக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்  துப்புரவு பணி செய்யும் பொழுது அணிந்து கொள்ளும் மாஸ்க், கிளவுஸ், கிருமி நாசினி ஆகியவை பேரூராட்சி நிர்வாகம் வழங்காததால் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பின்றி பல மாதங்களாக பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.

தூய்மை பணியின் போது எந்த உபகரணமும் இல்லாமல் பணி செய்வதால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பணி செய்யும்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இந்தப் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக துப்புரவு பணி பாதிக்கப்பட்டது. உடனடியாக துப்புரவு பணியாளருக்கு உபகரணம் வழங்கவில்லை என்றால் விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து கலைந்து சென்றனர். கொரோனா மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த செயல் கண்டனத்திற்குறியது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News