உள்ளூர் செய்திகள்

கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த கோரிக்கை

Update: 2022-06-30 10:06 GMT
  • சேலம் சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.
  • இந்த கோவிலில் சுப்பிரமணியருக்கு தமிழில் லட்சார்ச்சனையும் தமிழில் அர்ச்சனையும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

சேலம்:

சேலம் சுகவனேஸ்வர் கோவிலுக்கு கடந்த 1998-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே சிலைகள் அகற்றப்பட்டு வெயிலிலும் மழையிலும் கிடந்ததால் பக்தர்களிடையே அதிருப்தி ஏற்பட்டதால் சிலைகள் துணி சுத்தி வைக்கப்பட்டது. மேலும் கோவிலில் முறைகேடு நடந்ததாக பக்தர்கள் கூறியது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த கோவிலில் சுப்பிரமணியருக்கு தமிழில் லட்சார்ச்சனையும் தமிழில் அர்ச்சனையும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News