உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ள சாலையை படத்தில் காணலாம்.

கால்நடைதுறைக்கு சொந்தமான நிலத்தில் வழிப்பாதை அமைத்து தர கோரிக்கை

Published On 2023-09-29 14:56 IST   |   Update On 2023-09-29 14:56:00 IST
  • கால்நடைதுறைக்கு சொந்தமான நிலத்தை பொது வழியாக பயன்படுத்தி வந்தனர்.
  • ஒரு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கிட்டேசம்பட்டி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து விவசாயம் செய்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசித்து வரும் சிலரின் நிலங்கள் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் அருகே உள்ள கால்நடை துறைக்கு சொந்தமான மேய்ச்சல் நிலத்திற்கு அருகே உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக விவசாயம் செய்வதற்கும், விவசாய நிலத்திற்கு செல்வதற்கும் கால்நடைதுறைக்கு சொந்தமான நிலத்தை பொது வழியாக கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நி லையில் கால்நடைதுறைக்கு சொந்தமான நிலத்தின் அருகே உள்ள ஒரு குடும்பத்தார் நிலத்தை அபகரித்து பொதுமக்கள் யாரும் இவ்வழியை பயன்படுத்தாதவாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் விவசாய நிலத்திற்கு செல்ல முடியமால் கிராம மக்கள் தவித்து வந்தனர்.

இந்நிலையில் கால்நடை துறையினர் நிலத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர். ஆனாலும் அவ்வழியை பயன்படுத்த ஒரு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கிராம மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் கால்நடைக்கு சொந்தமான இடத்தில் பொதுவழிப்பாதை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News