உள்ளூர் செய்திகள்

சாலை வளைவில் உள்ள குறுகிய பாலம்.

பாலத்தை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

Published On 2022-06-14 09:25 GMT   |   Update On 2022-06-14 09:25 GMT
  • சாலையின் குறுக்கே குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும்பாசன வாய்க்கால்களின் பாலங்களும் அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து வசதிக்கு பயன்பட்டு வருகிறது.
  • இதனால், காலவிரையம் ஆவதோடு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

திருவையாறு:

கல்லணை-தோகூரி லிருந்து திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, கண்டியூர் மற்றும் அய்யம்பேட்டை வழியாக கும்பகோணம் செல்லும் மாநில நெடு ஞ்சாலை உள்ளது. எற்கனவே ஒற்றைச் சாலையாக இருந்த இச்சாலை புதுப்பிக்கப்பட்டு, இரட்டைச் சாலையாக அகலப்படுத்தப்பட்டு, மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்து மற்றும் லாரி முதலிய கனரக வாகனங்களின் அதிகமான போக்குவரத்தை முன்னிட்டும் மாநில நெடுஞ்சாலையின் அகலத்திற்கேற்பவும் இச்சாலையின் குறுக்கே குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும்பாசன வாய்க்கால்களின் பால ங்களும் அகலப்படு த்தப்பட்டு போக்குவரத்து வசதிக்கு பயன்பட்டு வருகிறது.

ஆனால், கண்டியூர்கிழக்கு எல்லையில் அய்ய ம்பே ட்டைச் சாலை கொ ண்டை ஊசி வளைவு திருப்பத்திலேயே பழங்கால பாசன வாய்க்கால் குறுகிய பாலம் உள்ளது. கொண்டை ஊசி வளைவிலும் குறுகிய நிலையிலும் இப்பாலம் உள்ளதால் பஸ், லாரி முதலிய வாகனங்கள் திரும்பும்போது எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியாததோடு, நேரெதிரே சந்திக்கும் வாகனத்திற்கு பின்னோக்கி சென்றே வழிவிட்டு கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், காலவிரையம் ஆவதோடு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.எனவே, கண்டியூர் கிழக்கு எல்லையிலுள்ள மாநில நெடுஞ்சாலை பழங்கால ஒற்றைப் பாலத்தை அகலப்படுத்தி போக்குவரத்து வசதியை மேம்படுத்திட ஆவன செய்யுமாறு வாகன ஓட்டிகளும் சம்மந்தப்பட்ட துறையினரிடம்சமூக ஆர்வலர்களும் கோருகிறார்கள்.

Tags:    

Similar News