உள்ளூர் செய்திகள்

கொடைக்கானல்- அடுக்கம் மலைச்சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கொடைக்கானல்-அடுக்கம் மலைச்சாலையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

Published On 2023-03-12 06:39 GMT   |   Update On 2023-03-12 06:39 GMT
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு குருடிக்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.
  • விரைவில் சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் இருந்து பெரியகுளத்துக்கு அடுக்கம் வழியாக செல்வதற்கு மலைச்சாலை உள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதில் குறைவான பயண நேரத்தில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குருடிக்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக மூட்டைகள் அடுக்கி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த நிலையில் ரூ.2.50 கோடி மதிப்பில் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை த்துறை மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணி தொடங்கி உள்ளது. ஜே.சி.பி., பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருவதாலும் பாறைகள் சாலையில் உருண்டு வரு வதாலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுக்கத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து விளைவிக்கப்படும் பயிர்களை பெரியகுளம் மற்றும் வத்தலக்குண்டு பகுதிக்கு இந்த சாலை வழியாகவே கொண்டு செல்கின்றனர். தற்போது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் வத்தலக்குண்டு வழியாக சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேரம் மற்றும் பணம் விரையம் ஆகிறது. எனவே விரைவில் சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News