உள்ளூர் செய்திகள்

வாடகை வாகன டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-11-22 09:43 GMT   |   Update On 2022-11-22 09:43 GMT
  • சுற்றுலா தளங்களில் சுகாதாரமான முறையில் கழிப்பறைகளை அமைத்து தர வேண்டும்.
  • இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில், இன்று வாடகை வாகனங்கள் டிரைவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் வாகன பர்மிட்டை பதிவிறக்கம் செய்வதை அரசு எளிமைப்படுத்த வேண்டும்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து பதிவு கட்டணங்களையும் 177 சதவீதம் உயர்த்துவதை தமிழக அரசு பரிசிலிக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைத்து அதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசை தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.

மானிய விலையில் டீசல் வழங்குவதற்கு வழிவகை செய்து தர வேண்டும். சுற்றுலா தளங்களில் சுகாதாரமான முறையில் கழிப்பறைகளை அமைத்து தர வேண்டும்.

வாகனங்களை தடுத்து நிறுத்தி டிரைவர்களுக்கு அபராதம் என்ற பெயரில் ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் வசூலிப்பதை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News