உள்ளூர் செய்திகள்

தேங்கியுள்ள டயர்கன் அகற்றப்பட்டது.

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த டயர்கள் அகற்றம்

Published On 2023-10-07 09:23 GMT   |   Update On 2023-10-07 09:23 GMT
  • பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.
  • புகையிலை பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாபநாசம்:

பாபநாசம் பேரூராட்சியில் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்லப்பா, சுகாதார ஆய்வாளர்கள் நாடிமுத்து , மருத்துவமில்லா மேற்பார்வையாளர் தியாகராஜன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம் மற்றும் டெங்கு களப்பணியாளர்கள் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தேங்கியுள்ள டயர்களையும் தேவையற்ற பொருட்களையும் அப்புறப்படுத்தினார்கள்.

பாபநாசம் பகுதியில் புகையிலை விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு ரூ.2,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News