உள்ளூர் செய்திகள்
செங்கோட்டை நூலகத்தில் ரெயில்வே அட்டவணை வெளியீடு
- செங்கோட்டையில் இருந்து தினந்தோறும் ரெயில் புறப்படும், வந்தடையும் நேரம் குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டது.
- ரெயில்வே அட்டவணை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை அரசு நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் புறப்படும் ரெயில்களின் நேரம், திரும்பி செங்கோட்டைக்கு வந்தடையும் நேரம் ஆகியவை குறித்து அட்டவணை தயாரிக்கப்பட்டு அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. 5000 நோட்டீசுகள் அச்சடிக்கப்பட்டு அரசு அலுவலர்கள், பொதுமக்கள், வணிகப் பெருமக்கள், வாசகர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டது.